Thursday, January 25, 2018

வேதத்தின் பார்வையில் கடவுள் !!



வேதத்தின் பார்வையில் கடவுள் !! 

 


கடவுளைப்பற்றிய வேதத்தின் பார்வை அலாதியானது:
`
ஈசாவாஸ்யம் இதம் சர்வம்' என்று ஈசாவாஸ்ய உபநிஷத் கூறுகிறது . கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். அதனால் இங்கு இருக்கும் அனைத்து பொருளிலும், ஜீவராசிகளிலும் இறைவன் இருக்கின்றார். இதை நம்முடைய சாஸ்திரம் , வேதங்களின் துணைகொண்டு தெளிவாக நிரூபிக்கிறது. வேதங்களில் கூறப்பட்டவை தர்க்கத்திற்கும் , அனுபவத்திற்கும் வேறுப்பட்டவை அல்ல . அதனால் இதை நம்புவது மட்டுமே அன்றி, சாஸ்திரம் மூலமாக புரிந்து கொள்ள வேண்டியது என்பதே மிக முக்கியமானதாகும். இதையே நமது சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இதையே பகவான் கிருஷ்ணர் கீதையில் மிக விபரமாக விளக்குகிறார்.

மயாததமிதம் ஸர்வம் , ஜகதவ்யக்த மூர்தினா (ch.9-4 )

இந்தஜகத்தனைத்தும் புலப்படாத ஸ்வரூபமுள்ள என்னால் வியாபிக்கப்பட்டிருக்கிறது .

மத்த: பரதரம் நாந்யத் , கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய
மயிஸர்வமிதம் ப்ரோதம் , ஸீத்ரே மணிகணா இவ (Ch.7-7)
  
தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் மேலானது வேறு ஒன்றும் இல்லை. நூலில் மணிகளின் வரிசைகள் (கோர்க்கப்பட்டது ) போல், என்னிடம் இவையனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன

பீஜம்மாம் ஸ்வர்வபூதாநாம் , வித்தி பார்த்த
ஸநாதநம்(Ch.7-10)


பார்த்தா, எல்லா பிராணிகளுக்கும் சாச்வதமான வித்தாக என்னை அறிவாயாக.

"அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம்
ப்ரவர்த்ததே" (Ch.10-8)

நானேஅனைத்திற்கும் பிறப்பிடம் , என்னிடமிருந்தே அனைத்தும் இயங்குகின்றன.

யோயோ யாம் யாம் தநும் பக்த : ச்ரத்தயார்சிதுமிச்சதி
தஸ்யதஸ்யாசாலம் ச்ரத்தாம் , தாமேவ விததாம்யஹம் (Ch.7-21 )


எந்த(ஆசையுடன் கூடி ) பக்தன் எந்த மூர்த்தியை சிரத்தையுடன் வழிபட விரும்புகிறானோ, அவனுடைய அந்த சிரத்தையையே நான் அசையாததாக (உறுதியானதாக) ஆக்குகிறேன் .

ஸதயா ச்ரத்தயா
யூக்தஸ்தஸ்யாராதனமீஹதே
லபதேசதத: காமான் மமைவ விஹிதான்ஹி தாந் (Ch.7-22)

அவன்அந்த சிரத்தையுடன் கூடியவனாய், அந்த தேவதையுடைய வழிபாட்டை செய்கிறான் . அதனிடமிருந்து என்னால் விதிக்கப்பட்டே ஆசைப்பட்ட அந்த பொருள்களை நிச்சயமாக அடைகிறான் .

பகவான்கிருஷ்ணரின் மேற்கூறிய வார்த்தைகள் மூலம் கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார் / நிறைந்திருக்கிறார் என்ற தத்துவம் தெளிவாகிறது. அதனால் கடவுளை எந்த உருவத்திலும் பூஜித்து பலன் அடையலாம். கடவுளின் அனுக்கிரஹம் ஜாதி பிரிவு வேறுபாடில்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆகையால்தான் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாத நாயன்மார்களும், ஆழ்வார்களும் தங்களது உன்னத பக்தியால் கடவுளை அடைந்து, கோவில்களில் தங்களுக்கென தனி இடமும் பெற்றுள்ளனர் .

மதம்மூலமாக நாம் எதை அடைய நினைத்தாலும் , இறைவனை தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் அது முழுமை பெறுகிறது. ரப்பர் மரத்திலிருந்து ரப்பர் எடுப்பதைப் போல நாம் இறைவனின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். மேற்கண்ட இறைவனைப் பற்றிய கருத்துக்கு எதிரான மதக் கொள்கைகளை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்பொழுது தான் கடவுளையும் , அவரின் அனுக்கிரஹம் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்து கலாச்சாரத்தை ஆராய்ந்து , புரிந்து கொண்டு , திட்டமிட்ட செயல்திட்டத்தின் மூலம் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படும் .


 

No comments:

Post a Comment