துளசிதாசர்
1554ஆம்
ஆண்டில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராஜாபூர் என்ற
இடத்தில் ஒரு பிராமணர் தம்பதியருக்கு
இவர் பிறந்தார் . அவர் பிறந்தவுடனேயே அவருடைய
அன்னை இறந்தார் . தன்னுடைய மனைவியின் இழப்பை தாங்க முடியாமல்
அவருடைய தந்தையும் துளசிதாசரை கைவிட்டுச் சென்றார் . அதன் பிறகு அவருடைய
வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த
வேலைக்காரி துளசிதாசரை எடுத்து வளர்த்தாள். அவளுடைய
உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் துளசிதாசரின் ஐந்தாவது வயதில் வேலைக்காரியும் மரணமடைந்தாள்.
அதன் பிறகு நர்ஹரிநந்தாஜி என்ற
வியாபாரி துளசிதாசரை எடுத்து வளர்த்து படிக்க
வைத்தார் . துளசிதாசர் ஸ்வாமி ராமானந் ஆஸ்ரமத்தில்
வேதங்கள் , புராணங்கள் , சாஸ்திரங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். தீனபந்து
பாதக் என்பவரின் மகள் ரத்னாவளியை மணந்து
கொண்டார் . துளசிதாசர் தன்னுடைய மனைவி மீது அதிகமான
அன்பும் மோகமும் வைத்திருந்தார் . ஒருநாள்கூட
மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாமல் துளசிதாசர்
அவள்மீது அப்படிப்பட்ட அன்பைப் பொழிந்தார் .
திடீரென்று
ஒருநாள் ரத்னாவளி அவள் பிறந்த வீட்டிற்கு
சென்றாள். மனைவியின் பிரிவைத் தாளமுடியாத துளசிதாசர் அவளுடைய வீட்டிற்குச் சென்றார்.
அங்கு துளசிதாசரைக் கண்டு கோபம் கொண்ட
ரத்னாவளி, " இப்படி தன்னுடைய சதைப்
பிண்டத்தின் மீது மோகம் கொள்வதற்கு
பதிலாக பகவான் ஸ்ரீராமர் மீது
மோகம் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்த மாதிரி நிலையிலிருந்து
விடுபட்டிருப்பாய்" என்று சொன்ன வார்த்தைகள்
துளசிதாசரை ஆழமாக பாதித்து அவருடைய
மனக்கண்களை திறந்து வைத்தது . அன்றிலிருந்து
அவர் பகவான் நாமத்தை புகழ்ந்து
பல நூல்களை இயற்றினார். ராமசரித்மானஸ்
, வைராக்ய சாந்தி பானி , பார்வதி
மங்களம் , கவிதாவளி , கீதாவளி , ஹனுமான் பஹூக் போன்ற
பிரசித்தி பெற்ற நூல்களை இயற்றி
இருக்கிறார் .
No comments:
Post a Comment