Friday, January 5, 2018

வல்லாரை கீரை பூரி


வல்லாரை கீரை பூரி


"பத்து வல்லாரை இலைகளை எடுத்து ஐந்து மிளகு சேர்த்து" அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூன்று மாதத்தில் மூளை திசுக்கள் வலுப்பெற்று, நரம்பு தளர்ச்சியை நீக்கி, தளர்வுற்ற தேகத்தை இறுகிப் பலம் பெற செய்யும்.
 

அளவில்லா மருத்துவ குணங்கள் நிறைந்த வல்லாரை கீரையை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, கொஞ்சம் தண்ணீர் கலந்து மிக்சியில் விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு கோதுமை மாவுடன் இந்த வல்லாரை கீரை விழுதையும் சேர்த்து பிசைந்து வழக்கம் போலவே பூரியாக செய்யலாம்.. இதில் எண்ணெய் ஒட்டாது... நன்றாக உப்பி வரும்.. மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்
 

வல்லாரை கீரை மட்டுமில்லாமல் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி, முடக்கத்தான், தூதுவளை என எந்த மூலிகை கீரையையும் இப்படி விழுதாக அரைத்து பூரி () சப்பாத்தி செய்யலாம்...
 

இதேபோல கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்றவற்றில் விதவிதமாக செய்யப்படும் இட்லி, தோசை போன்றவற்றிலும் இந்த மூலிகை கீரை விழுதை கலந்து செய்யலாம். இதனால் சாதாரணமான உணவு வகைகள் சுவையுடன் மருத்துவ குணங்களும் நிரம்பி உடலுக்கு ஆரோக்கியம் தரும்..
இதற்கு தொட்டுக் கொள்ள அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சாம்பார், காளான் கிரேவி, பட்டாணி குருமா என செய்துகொள்ளலாம்... வித்தியாசமாக கலருடன் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்...

No comments:

Post a Comment