Friday, January 5, 2018

பிஸ்தா புற்றுநோயைத் தடுக்கும் பிஸ்தா..!


பிஸ்தா

புற்றுநோயைத் தடுக்கும் பிஸ்தா..!




சக்தி வாய்ந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்களை, ` என்ன பெரிய பிஸ்தாவா?’ என்று கேட்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது. இந்த பிஸ்தாவைவிட, பருப்பு வகையைச் சேர்ந்த பிஸ்தாவுக்கு சக்தி நிறையவே உள்ளது.

இதனால்தான், புதிதாய் திருமணம் ஆனவர்களையும், திருமணம் முடிவானவர்களையும், `பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிட்டு, உடம்பை தேத்துபா…’ என்கிறோம்.

இப்படி சிறப்புமிக்க பிஸ்தாவுக்கு என்றே உலக அளவில் ஒரு தினம் கொண்டாடுவது எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று.

சிறிய முடப்பட்ட திண்ணமான ஓட்டிற்குள் பச்சை நிறத்தில் காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோஎன்று உலக அளவில் அழைக்கிறார்கள்.

30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், பைடோ ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் பிஸ்தாவில் நிறைந்துள்ளன. மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும்.

கி.மு.7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இந்த பிஸ்தா மரத்தை பயிரிட்டு, அதன் பலனை அனுபவித்துள்ளது. அமெரிக்காவில் 1903 முதல் அங்குள்ள கலிபோர்னியா மாகாண பகுதிகளில் இந்த மரங்கள் அதிக அளவில் பயிர் செய்யபட்டன. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பிஸ்தா உற்பத்தி செய்யபடுகிறது.

சீனர்களும் பிஸ்தாவின் பலத்தை நிறையவே உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த பருப்பை `மகிழ்ச்சியான பருப்புஎன்று அழைக்கிறார்கள். பிஸ்தா பருப்பின் வடிவத்தை வைத்தே, அதாவது அதுவாய் திறந்து பல்தெரிய சிரிப்பதுபோல் காணபடுவதால் இந்த பெயரை அவர்கள் அதற்கு சூட்டியுள்ளனர்.

சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் கொண்டாடும்போது, இந்த பிஸ்தா பருப்புகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள். ஆரோக்கியம், சந்தோஷம், ராசியான எதிர்காலம் ஆகியவற்றின் சின்னமாக அவர்கள் பிஸ்தாவை கருதுவதுதான் இதற்கு காரணம்.

கலிபோர்னியாவில் அதிக அளவில் பிஸ்தா உற்பத்தி செய்யபட்டாலும், அதை அதிக அளவில் சாப்பிடுபவர்களின் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் சீனர்கள் தான். தனி நபராக எந்த நாட்டினர் அதிக அளவில் பிஸ்தா சாப்பிடுகிறார்கள் என்று கணக்கெடுத்தால், அதில் முதலிடம் பிடிப்பவர்கள் இஸ்ரேலியர். இவர்களது நொறுக்குத் தீனிகளில் பிஸ்தாவும் முக்கிய இடம்பெறுகிறது.

இந்தியாவில் உஷ்ண பொருளாக பிஸ்தாவை பார்ப்பதால், அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவுதான். இந்தியாவில் பிஸ்தாவை அப்படியே சாப்பிடாவிட்டாலும், கேசர் பிஸ்தா சர்பத், ஐஸ் கிரீம், பிஸ்தா குல்பி ஆகியவற்றில் பிஸ்தா பயன்படுத்தபட்டு, இந்தியர்களால் சாப்பிடபடுகிறது.

ரஷ்ய நாட்டினர் கோடைகாலத்தில் பீர் குடிக்கும்போது, அதற்கு சைடு டிஷ் ஆக பிஸ்தா உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரித்துக் கொள்வதற்காக மதுபானத்துடன் சிறிதளவு பிஸ்தாவையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் : தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது. வெள்ளை ரொட்டிடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியை தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர். பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும்பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

No comments:

Post a Comment