Thursday, January 25, 2018

கையை நீட்டும் முட்டாள் பெற்றோர்கள்...



கையை நீட்டும் முட்டாள் பெற்றோர்கள்...





             குழந்தையை வளர்க்கும் விதம், அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை நிச்சயம் பெற்றோருக்கு இருக்கும், இருக்க வேண்டும் அதில் தவறில்லை. ஆனால் குழந்தை இப்படித்தான் செல்ல வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவர்களை நம் கைக்குள் கொண்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல.
                அவ்வாறு குழந்தைகளை அடக்க ஒடுக்கும் போது அவர்கள் இயலாமை வரை நம்மிடம் அடங்கி இருப்பார்கள், ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை அவர்கள் எதிர்க்க தவறுவதில்லை என்பதை நாம் கண்கூட கண்டிருக்கிறோம்..
தினமும் பள்ளிக்கு குழந்தைகள் சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்பது பள்ளியின் சட்டம், அப்போது தான் அவனுக்கு காலத்தின் அருமை தெரியும். குழந்தை பள்ளிக்கு 8.45க்கு போக வேண்டும் என்றால் நமது வீட்டுக்கும், பள்ளிக்கும் உள்ள இடைவெளி மற்றும் செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து நெறிசலை கணக்கிட்டு, நாம் முன்னதாக கிளம்பவேண்டும் இது தான் எல்லா வீட்டிலும் வழக்கம்..
              குழந்தைக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று நாம் முடிவு செய்தாலும் அவர்களிடம் கருத்து கேட்க வேண்டும், குறைந்த பட்சம் அவர்கள் சொல்ல வருவதையாவது என்ன ஏது என்று கேட்கவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்து கை நீட்டுவதை இந்த பெற்றோர்கள் என்று தான் விடுவார்களோ.
              நீ அடிச்சுக்கோ நான் போகலை இந்த வார்த்தை எவ்வளவு வீரியமான வார்த்தை, அப்போ அதுக்கு அடிமேல் பயம் இல்லை, எத்தனை அடி அடிப்பாங்க என்று இந்த வயதிலேயே நன்றாக யோசித்து பேசுகிறது. முட்டாள் பெற்றோர்கள் தான் யோசிக்க மறுத்து அடியை மட்டுமே பிரதானமாக கொண்டு குழந்தையை வளர்கின்றனர்..
             பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாலும், குழந்தைக்காக தினமும் ஒரு அரை மணி நேரம் செலவிடுவதில் தவறே இல்லை. நம் வேலையை பார்த்து கொண்டே அவனிடம் பேசலாம், சமைக்கும் போதும், அலுவலக வேலை இருந்தாலும் அதை பார்த்து கொண்டே அந்த குழந்தையிடம் பேசலாம், இதை விட்டு விட்டு எங்க அவனோடு பேசவே நேரம் இல்லை என்று நேரத்தின் மீது தான் பழிபோடுகின்றனர் இங்குள்ளவர்கள்.
        தினமும் பேஸ்புக்கிற்கும், வாட்ஸ் அப்பிற்கும் ஒதுக்கம் நேரத்தை விட குழந்தைக்கு ஒதுக்கம் நேரம் குறைவாகத்தான் இருக்கிறதுகுழந்தை அடம் பிடிக்கும் போது, அடிக்கிறதை விட்டு விட்டு, எல்லா கோபத்தையும் அடக்கிகொண்டு பேசிபாருங்கள், நிச்சயம் விரைவில் உங்கள் செல்லக்குட்டி, உங்களோடு சிறிதி நேரமே பேசினாலும், அந்த சிறிது நேரம் எப்போது வரும் என்று ஏங்கித்தவிப்பான்...
             நாம் என்ன பேசுகிறோமோ அதைத்தான் குழந்தைகளும் பேசுவார்கள், ஆடம்பரமாக உடை அணிந்து, உயர்தரவாகனங்களில் பவனி வந்தாலும் குழந்தைகள் முன் பேசும் போது கவனமாக பேசவேண்டும், இதை பெற்றவர்கள் உணரவேண்டும்..
 

No comments:

Post a Comment