Tuesday, January 30, 2018

மகரிஷி வால்மீகி



மகரிஷி வால்மீகி

 


           மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு வருண் பிரசேதாஸ் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார் . வருண் பிரசேதாவிர்க்கு ரத்னாகர் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகர் பிறந்தவுடன் அவருடைய தந்தை மரணமடைந்தார் . பெற்றோர்களை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென்றார் . காட்டிலுள்ள பிலவர்கள் ரத்னாகரை வளர்த்தார்கள் . ரத்னாகர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித்தார் . காட்டிற்குள் நுழையும் பயணிகளிடமிருந்து திருடிக் கொண்டிருந்த ரத்னாகர் அந்த வழியே சென்று கொண்டிருந்த தேவரிஷி நாரதரிடமிருந்து திருடும்போது, இந்தத் திருட்டினால் ரத்னாகருக்கு சந்தோசம் கிடைக்கிறதா என்று கேட்டார் . அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பாவப்பட்ட வருமானத்தினால் சந்தோசம் பெறுகிறார்களா என்று கேட்டார். நாரதரை மரத்தோடு கட்டிப் போட்டு ரத்னாகர் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வந்தார். நாரதர் கேட்ட கேள்விக்கு அவர்கள் இந்தப் பாவச் செயலில் தங்களுக்கு எந்தவித பங்குமில்லை என்று சொன்னார்கள் . அவர்கள் சொன்ன வார்த்தை ரத்னாகரின் கண்களைத் திறந்தன . ரத்னாகர் நாரதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் . அன்றிலிருந்து ரத்னாகர் திருட்டுத் தொழிலை விட்டுட்டு கடுந்தவம் செய்தார் . அவர் தவமிருந்த சமயத்தில் அவர் உடல் மீது எறும்புகள் புற்று வைத்து விட்டன . அதனையும் பாராட்டாமல் அவர் தியானத்தில் மூழ்கினார் .
            சிறிது காலம் கழித்து தேவரிஷி நாரதர் அவ்வழியே சென்றார் . ரத்னாகரின் உடல் முழுதும் புற்றுகளால் மூடப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அவருக்கு வால்மீகி என்று பெயர் கொடுத்தார் . த்ரேதாயுக அவதாரமான ஸ்ரீராமபிரானின் வரலாற்றைச் சொன்னார் . வால்மீகி 24 ௦௦௦000 ஸ்லோகங்களைக் கொண்டு பெருமை வாய்ந்த ராமாயணத்தைப் படைத்தார் . வால்மீகி படைத்த ராமாயணம் இன்றும் மக்களால் போற்றப்பட்டு வருகிறது .
 

No comments:

Post a Comment