சைதன்ய மகாபிரபு
1486 ஆம் ஆண்டில் மேற்கு
வங்காளத்தில் உள்ள
நவதீப்
என்ற
இடத்தில் சைதன்ய
மகாபிரபு பிறந்தார் . ஆன்மீகவாதியான ஜகன்நாத் மிஸ்ரா
- சாக்
ஷி
தேவிக்கு மகனாக
பிறந்தார் . சைதன்யாவின் முதல்
சகோதரர் விஸ்வரூப் சன்யாசம் வாங்கிக் கொண்டார் . சைதன்ய
மகாபிரபு குழந்தைப் பருவத்தில் விச்வாம்பர் என்ற
பெயரால் அழைக்கப்பட்டார் . அவரை
மக்கள்
செல்லமாக நிமாய்
என்றும் அழைத்தார்கள் .
குழந்தைப் பருவத்தில் அவர்
படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்தார். அவர்
12 வது
வயதில்
சட்டப்
படிப்பில் தேர்ச்சி பெற்றார் . அப்போது தான்
அவருடைய தந்தை
மரணம்
அடை
ந்தார்.
அதன்
பிறகு
அவர்
பண்டித் வல்லபாசாராவிடம் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக் கொண்டார் . அந்தச்
சமயத்தில் தன்னுடைய குருவின் மகளான
லக்ஷ்மியை மணந்து
கொண்டார் . சைதன்ய
மகாபிரபு தன்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு
சம்ஸ்கிருத பாடசாலையைத் தொடங்கினார் . அந்தப்
பாடசாலை நாளடைவில் வளர்ச்சி பெற்றதால் சைதன்யா அந்தப்
பாடசாலை மீது
முழு
கவனத்தை செலுத்தினார் . குடும்பத்தின் மீது
அக்கறை
எடுத்துக் கொள்ளாததால் அவருடைய மனைவி
லக்ஷ்மி திடீரென்று மரணமடைந்தார் .
தன்னுடைய அன்னையின் வற்புறுத்தலால் மீண்டும் சைதன்யா விஷ்ணுப்ரியா என்பவரை மணந்து
கொண்டார் . ஒரு
சமயம்
சைதன்யா காயா
சென்ற
போது
மாபெரும் தபஸ்வியை சந்தித்தார். அவரிடமிருந்து மந்திரங்களைக் கற்று
கொண்டார் . இந்த
மந்திரத்தை உச்சரிக்கும் போது
சைதன்யாவிடம் மாற்றங்கள் தோன்றின . அவர்
நீண்ட
நேரம்
தியானம் செய்யத் தொடங்கினார் .
சைதன்யா அனுதினமும் கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து , அவர்மீது மோகம்
கொண்டு பக்தி
கானங்கள் பாடினார் . 1510 ஆம் ஆண்டில் சைதன்யா சந்நியாசம் எடுத்துக் கொண்டார் . பதினெட்டு வருடங்களுக்கு சைதன்யா ஜகன்நாத்பூரியில் தஞ்சமடைந்தார் . ஒரு
நாள்
ஜகன்நாதர் சின்ன
மூர்த்தியை அரவணைத்துக் கொண்டிருந்த போது
அவருடைய ஆத்மா
பிரிந்து , அந்தச்
சின்ன
மூர்த்தியோடு கலந்தது . ராதா
- கிருஷ்ண மீது
பல
பாடல்களை இயற்றிய சைதன்ய
மகாபிரபு என்றும் நம்முடைய நினைவில் இருந்துகொண்டே இருக்கிறார்
No comments:
Post a Comment