Tuesday, January 11, 2022

லகோட்டுப் பழம்

 லகோட்டுப் பழம்


லகோட்டுப் பழம் என்பது ஒரு அரிய வகை பழமாகும். பொதுவாக சந்தைகளில் பெருமளவில் இந்த பழம் கிடைப்பதில்லை. ஆனால் இதன் ஊட்டச்சத்து மதிப்பு மிக அதிகம். மற்ற பழங்களைப் போல், இந்தப் பழத்தையும் சாலடில் கலந்து இந்த பழத்தின் சுவையை ருசித்து மகிழலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிப்பது, அஜீரணத்தைத் தடுப்பது, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, புற்று நோய் அபாயத்தைத் தடுப்பது, சுவாச ஆரோக்கியத்திற்கு ஆதாரவாக இருப்பது, கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் வைப்பது, எலும்புகளை வலிமையாக்குவது, இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பது, நீரிழிவு பாதிப்பை நிர்வகிப்பது, ஆரோக்கியமான கண் பார்வையை நிர்வகிப்பது, அழற்சிக்கு சிகிச்சை அளிப்பது போன்றவை லகோட்டுப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளாகும்.

இந்த லகோட்டுப் பழத்தை தொடர்ந்து உங்கள் உணவில் இணைத்துக் கொள்வதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம் போன்றவற்றிற்கு சிறந்த நன்மைகள் கிடைக்கின்றன. கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு இயற்கை ஆதாரமாக இந்த பழம் விளங்குகிறது.

 

லகோட்டுப் பழம் என்றால் என்ன?

இந்த லகோட்டுப் பழம் சீனாவைச் சேர்ந்தது. உருண்டை வடிவத்தில் இருக்கும் இந்த பழம், அடர் ஆரஞ்சு நிறத்தைக் கொண்டதாகும். குளிர்ச்சியான பிரதேசங்களில் குறிப்பாக மலைகளில் இந்த பழம் அதிகமாக விளையும். ஹிமாலய மலையிலும் இந்த பழத்தினை நாம் காண முடியும். இந்த மரம் குளிர்காலத்தில் பூ பூத்து, மற்ற காலங்களில் கனியைத் தரும் என்பது வியப்பைத் தரும் ஒரு செய்தியாகும். இந்த மரத்தின் இலைகள் கூட ஊட்டச்சத்து மிகுந்தவை. இதன் ஊட்டச்சத்துகளை நீங்கள் பெற்றுக் கொள்ள, இந்த இலைகள் கொண்டு தேநீர் தயாரித்துப் பருகலாம்.

 

ஊட்டச்சத்து மதிப்பு

. கால்சியம் - 5 கிராம்

. கலோரி - 47

. கார்போஹைட்ரெட் - 12 கிராம்

. உணவு நார்ச்சத்து - 7 கிராம்

. இரும்பு - 5 கிராம்

. மெக்னீசியம் - 2 கிராம்

. பொட்டாசியம் - 266 மிகி

. நிறைவுறாத கொழுப்பு - 1 கிராம்

. புரதம் - 4 கிராம்

. சோடியம் - 1 மிகி

. வைட்டமின் ஏ - 2 கிராம்

. வைட்டமின் பி 6 - 9 கிராம்

. வைட்டமின் சி - 3 கிராம்

 நோயெதிர்ப்பு சக்தி

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் விரைவாக செயல்பட வைட்டமின் சி சத்து ஒரு மிக முக்கிய ஊட்டச்சத்தாகும். இது ஒரு சிறந்த அன்டி ஆக்சிடென்ட்டாக செயல் புரிந்து , நாட்பட்ட நோய்கள் தொடர்பான அபாயத்தைப் போக்குகிறது. லகோட்டுப் பழத்தில் மிக அதிக வைட்டமின் சி சத்து உள்ளது.

 அஜீரணத்தைத் தடுக்க

உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்பாடுகளில் அஜீரணமும் ஒன்றாகும். பலருக்கும் அஜீரணம் காரணமாக குமட்டல் மற்றும் வாந்தி உண்டாகலாம். வயிறு தொடர்பான தொந்தரவுகளுக்கு ஒரு பாதுகாப்பான தேர்வாக உணவு நார்ச்சத்தைப் பரிந்துரைக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

 உயர் இரத்த அழுத்தத்திற்கு

உயர் இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இந்த பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். ஆகவே இதய ஆரோக்கியம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. உயர்ந்த அளவு இரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்த பொட்டாசியம் சிறந்த ஆதாரமாக விளங்குவதாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

 

புற்றுநோய்க்கு

புற்று நோய் அணுக்கள் உண்டாவதற்கு ஃப்ரீ ரேடிகல் என்பவை காரணமாக உள்ளன. இதனைத் தடுக்க அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். லகோட்டுப் பழம் போன்ற பழ வகை மற்றும் ஆர்கானிக் காய்கறிகளில் அன்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளன. ப்ரீ ராடிகேல்களை சமநிலைப்படுத்தும் செயல்பாடுகளில் அன்டி ஆக்சிடென்ட்கள் சிறப்பாக செயல்பட்டு, நாட்பட்ட வியாதிகளான வாய் புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்றவை உண்டாகும் வாய்ப்பைக் குறைக்க உதவுகின்றன.

 சுவாச ஆரோக்கியத்திற்கு

லகோட்டுப் பழம் மட்டுமல்ல அதன் தேநீரும் பல்வேறு ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குகின்றன. லகோட்டு தேநீர், ஒரு சிறப்பான சளி நீக்க மருந்தாக செயல்பட்டு சுவாச மண்டலம் தொடர்பான தொந்தரவுகளைப் போக்க உதவுகிறது. சளி மற்றும் கோழை வெளியேற்றத்தில் இந்த தேநீர் இயற்கை முறையில் செயல்புரிந்து கிருமிகளை அழிக்கிறது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் இருந்தால், வீட்டுத் தீர்வுகளை முயற்சிப்பதுடன் மருத்துவரை அணுகுவதும் நல்ல பலனைத் தரும்.

உயர் கொலஸ்ட்ரால்

உயர் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப் படுத்த ஒரு சுவை மிகுந்த ஆதாரமாக விளங்குவது லகோட்டுப் பழம். பொட்டாசியம், ஜின்க், மங்கனீஸ் போன்ற கனிமங்கள் இந்த செயல்பாட்டை சிறந்த முறையில் செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய கனிமங்கள் லகோட்டுப் பழம் அல்லது லகோட்டுத் தேநீரில் காணப்படுகிறது. இருப்பினும், இந்த செய்தி குறித்த பல ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.

 எலும்புகளை வலிமையாக்க

வயது முதிர்ந்த பெண்களுக்கு எலும்பு அடர்த்தி மற்றவர்களை ஒப்பிடும்போது குறைவாக இருக்கும். குறிப்பாக மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு இது ஒரு வழக்கமான பிரச்சனையாக இருக்கும். லகோட்டுப் பழத்தில் காணப்படும் உயர்ந்த அளவு கனிமம் காரணமாக எலும்பு அடர்த்தி குறைவாக இருக்கும் உடல் பகுதிகளில் வலிமையை மீட்டுத் தர இந்த பழம் உதவுகிறது

 நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகள் லகோட்டின் நன்மைகளைப் பெற இதன் தேநீரை சுவைத்து மகிழலாம். தொடர்ச்சியாக லகோட்டு தேநீர் பருகி வருவதால், சர்க்கரை மற்றும் க்ளுகோஸ் அளவு பராமரிக்கப்பட்டு, இரத்த ஓட்டத்தில், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

கண் பார்வையைப் பராமரிக்க

அழற்சிக்கு தீர்வு

உடலை ஃபிட்டாக வைக்க

ஆரோக்கியமான சருமத்திற்கு

லாகோட்டுப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் நம்ம ஆச்சர்யபடுத்தும் விதத்தில் உள்ளன. ஆகவே, இந்த பழத்தை உங்கள் தினசரி சாலடில் சேர்த்து அதன் ஊட்டச்சத்துகளைப் பெற்றிடுங்கள்.


No comments:

Post a Comment