Tuesday, January 4, 2022

ஆங்கில வருடத்தை புத்தாண்டாக கொண்டாடியவர்களுக்காக இந்த பதிவு:

 ஆங்கில வருடத்தை புத்தாண்டாக கொண்டாடியவர்களுக்காக இந்த பதிவு

ஹிந்து மதம் சொல்லி வைத்த தெரியாத உண்மைகள்.

 

சித்திரை 1

ஆடி 1

ஐப்பசி 1

தை 1

 

இவற்றை எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.  நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்...  என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? கண்டிப்பாக இல்லை...  ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்....  அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்.

அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும். இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம். 

 

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

 

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் சித்திரை 1.., புத்தாண்டு..  (In science it is called Equinox) அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் ஆடி 1 .... (solstice) மறுபடியும் கிழக்குக்கு வரும்போது ஐப்பசி 1 (equinox)  மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது தை1 (solistice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

 

*சித்திரை (equinox) - புத்தாண்டு*

*ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு*

*ஐப்பசி (equinox)- தீபாவளி*

*தை (winter solstice) - பொங்கல்*

 நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

நமது முன்னோர்கள்..... "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் மிகவும் மகத்தானவர்கள்.

 

No comments:

Post a Comment