Saturday, January 1, 2022

பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனை

 பணமில்லா (டிஜிட்டல்பரிவர்த்தனை




அன்பான வங்கி வாடிக்கையாளர்களே:

தயவுசெய்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகையை மாதாமாதம் திரும்ப எடுத்து விடுங்கள்பணமில்லா (டிஜிட்டல்பரிவர்த்தனை செய்வதை நிறுத்தி விட்டு, முழுவதும் பண பரிவர்த்தனைகள் செய்யுங்கள். இப்படி செய்யும் போது, எல்லாவிதமான (அனாவசியமாக) சேவை கட்டணங்களையும் தவிர்க்கலாம். வங்கியாளர்களுக்கு ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுக்கலாம். வங்கிகள் தான் வாடிக்கையாளர்ளை சார்ந்து இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வங்கிகளை சார்ந்து இல்லை.

மக்களுடைய வலிமை என்ன என்பதை காட்டுவோம்

கேள்வி:

பணமில்லா பரிவர்த்தனை செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

பதில்:

சார், ஒரு 100 ரூபாய் 1,00,000 முறை கைமாற்றம் செய்யப்படுகிறது என்று வைத்து கொள்வோம். இதன் மூலம் யாருக்கும் எந்த கமிஷனும் போகாத பட்சத்தில், இந்ந தொகையின் மதிப்பு அப்படியே தான் இருக்கும்.

இதையே, பணமில்லா பரிவர்த்தனை மூலம் அந்த தொகையை பரிமாற்றம் செய்தால், ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 2.5% கமிஷன் பிடிக்கபடும். அப்படியானால் 1,00,000 முறை 2.5% = 2500%. அதாவது 2,50,000 ரூபாய் ( இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) Paytm அல்லது Jio Money போன்ற பல்வேறு சேவை வழங்குபவர்களுக்கு சென்றடைகிறது. வெறும் 100 ரூபாய்க்கே இப்படி. ஒரு கும்பலுக்கு நிரந்தரமாக தங்க முட்டையிடும் வாத்து பரிசாக கிடைத்தது போன்ற காரியம் இது.  ஆகவே தான் இது கொள்ளையிலும் மகா பெரிய கொள்ளை.  மிக முக்கியமான புள்ளி விவரங்கள் இது. தயவுசெய்து படித்து புரிந்து கொள்ளவும். இதில் அரசியல் இருக்காது.

உங்களுக்கு தெரியுமா

1) ஒவ்வொரு பண பரிமாற்றத்திற்கும் விற்பனையாளரிடமிருந்தும், பணம் பெறுபவரிடமிருந்தும் debit cards என்று சொல்லப்படும் பற்று அட்டை 0.5%ல் இருந்து 1% வரை வசூலிக்கிறது.

 2) ஒவ்வொரு பண பரிமாற்றத்திதிற்கும் விற்பனையாளரிடமிருந்தும், பணம் பெறுபவரிடமிருந்தும் credit cards என்று சொல்லப்படும் கடன் அட்டை 1.5%ல் இருந்து 2.5% வரை வசூலிக்கிறது.

3) உங்களது e-walletல் உள்ள பணத்தை உங்கள் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், PayTM/Freecharge/Jio Money போன்ற பல்வேறு e-wallets 2.5%ல் இருந்து 3.5% வரை வசூலிக்கிறது.

ஒவ்வொரு மாதமும் ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள ATMல் இருந்தும் 2.25 லட்சம் கோடி பணம் எடுக்கப்படுகிறது (வருடத்திற்கு 25-30 லட்சம் கோடி) என்று RBI தகவல் தெரிவிக்கிறது. மேலும், வங்கியிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் பணத்தை சேர்த்து (ATM மற்றும் வங்கியில் இருந்து) வருடம் தோறும் மொத்தம் 75 லட்சம் கோடி ரூபாய் எடுக்கப்படுகிறது என்று மதிப்பிடப்படுகிறது.

இப்படி எடுக்கப்படுகிற பணம் எல்லாமேகணக்கில் போடப்படும்/வரியாக செலுத்தப்படும் பணமே. தற்போது, 3% பண பரிமாற்றங்கள் மின்னணு முறையில் தான் இருக்கிறது.

அப்படியே இந்த 75 லட்சம் கோடி ரூபாயும் மின்னணு முறையில் பரிமாற்றம் (பணமில்லா பரிவர்த்தனை) செய்யப்பட்டால், கம்பெனிகள் எவ்வளவு தூரம் சம்பாதிக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.. ( 75 லட்சம் கோடி ரூபாய் x 2%) சராசரியாக வைத்து பார்த்தாலே, வருடத்திற்கு 1.5 லட்சம் கோடி ரூபாய்!. விளையாட்டு இல்லைங்க

 இது தான் மிக பெரிய பகல் கொள்ளை. Reliance, PayTM, e-Banks etc போன்ற பெருநிறுவனங்களுக்கு  வருடத்திற்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் நேரடியாகவே சென்றடைகிறது.

 அப்படியானால் Demonetization (பணமதிப்பிறக்கம் செய்தல்) செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? கருப்பு பணத்தை ஒழிக்கவா அல்லது பெருநிறுவனங்களை தீனி போட்டு வளர்க்கவா? ஒரே ஆச்சரியமாக இருக்கிறது.

படித்ததிலிருந்து பிடித்த ஒரு பதிவு

 

No comments:

Post a Comment