எடுத்த காரியத்தை முடிக்கும் இரகசியம்
தினம் தினம் செய்யும் வேலைகள் மட்டும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நேரம் மட்டும் போதுமானதாக இல்லை. எப்படியும் நேரத்தை மிச்சப்படுத்தி செய்து விடாலாம் என்று நினைக்கும் போது புதிய வேலைகள் வந்து விடுகிறது. அப்போது செய்ய வேண்டிய வேலைகளை செய்ய முடிவதே இல்லை. இதன் காரணமாகவே மனஅழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது . இந்த பிரச்சனைகளை தினமும் எதிர்கொள்வது வழக்கமாக இருக்கிறது. இதை சரிசெய்வதற்க்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
சிறிய வயது முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே இருக்கக்கூடிய பொதுவான சிந்தனை தனது வேலைகளை சரியாக முடிக்க முடியவில்லையே என்பதே. இதுவே அதிகமான மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தன்மீதுள்ள நம்பிக்கை குறைய ஆரம்பிக்கிறது.
இதனால் தான் ஏதோ தவறான வழியில் செல்லதாக உணர்வுகள் ஏற்படுகிறது.
இதனால் மேலும் தன்னம்பிக்கை இழந்து தான் மேற்கொண்டுள்ள செயல்கள் அனைத்தையுமே முற்றிலுமாக செய்ய முடியாமலேயே போகிறது. நாம் கீழ்கண்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் மேற்கூறிய பிரச்சனைகளை எளிதில் தவிர்க்க முடியும்.
வாழ்கையில் நாம் செய்வதற்கு நிறைய செய்கள் இருக்கிறது. ஆனால் அனைத்திற்க்குமே சரியான அளவு முக்கியத்துவம் கொடுப்பது தவறு. சில செயல்களை தவிர்பதனால் கூட ஒன்றும் ஆகிவிடாது. ஆகவே உங்களது வாழ்வில் நீங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்தின் அடிப்படையில் செயல்கள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரித்து செய்ய பழகுங்கள்.
அனைத்துமே முக்கியமாக தெரிகிறது எனில், நீங்கள் செய்யும் செயலால் உங்களுக்கு கிடைக்கபோகும் இலாபம் மற்றும் விளைவை எண்ணி பாருஙகள். இலாபமோ, விளைவோ குறைவாகவோ அல்லது ஒன்றுமே இல்லாமலோ இருந்தால் அத்தகைய செயல்களை தவிர்ப்பது நல்லது.
முக்கியமாக இந்த நிமிடத்தில் உங்களுக்கு தேவை எதுவோ அதில் கவனம் செலுத்தி உங்களுடைய செய்களை செய்ய ஆரம்பித்தால் நிறைய செயல்களை கவனச்சிதறல்கள் இன்றி குறைவான நேரத்தில் செய்து முடிக்க இயலும்.
அனைத்து செயல்களிலும் முழுமையாக பூரணத்துவத்துடன் செய்ய வேண்டிய வேலைகளாக இருக்காது. ஆனால் அனைத்து செயல்களையும் மேற்கூறியவாறு செய்ய எண்ணுவதால் எந்த ஒரு செயலையும் முழுமையாக முடிக்க முடியாமல் போகிறது.
எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்க்கான நேரத்தை ஒதுக்கி அதற்குள் செய்துமுடிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்,
இது பழக்கத்திற்கு வரவர நீங்கள் மேற்கொண்டுள்ள செயல்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க பழகிவிடுவீர்கள்.
ஆனால் இன்னும் சிறப்பாக செய்யலாமே என்று எண்ணினால் அதற்கு முடிவே கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களால் மிக முக்கியமான தரமான செயல்களை செய்ய முடியாமல் போய்விடும்.
நீங்கள் ஒரு வேலையை செய்வதாக நினைத்து அதில் இறங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை அதிலிருந்து வெளியே வரக்கூடாது. ஆனால் உங்களது மனம் இதை விட முக்கியமான வேலை இருக்கிறது என்று உங்களை திசைதிருப்ப எத்தணிக்கும். ஆனால் எந்த சூழலிலும் அதற்கு இசைந்துவிடக்கூடாது.
எப்போதுமே நீங்கள் மேற்கொள்ளும் செயல் எவ்வளவு சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருந்தாலும் கூட அதை முடிக்காமல் அடுத்த செயலுக்கு செல்லாதீர்கள். அவ்வாறு முடிக்காமல் நீங்கள் செல்வது உங்கள் திறமை சார்ந்த விசயம் அல்ல. உங்களது பழக்கவழக்கங்களை சார்ந்து என்பதை மனதில் கொள்ளுங்கள். செயலை பாதியிலேயே விட்டு செல்வது பழக்கமாக மாறிவிட்டால் உங்களால் எந்த ஒரு செயலையும் முழுமையாக முடிக்க முடியாது. இது உங்களது தன்னம்பிக்கையை இழக்க செய்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நாம் நமது வாழ்கையில் பல தருணங்களில்
( NO) முடியாது என்ற வார்த்தையை சொல்ல பழகவேண்டும். ஏனெனில் இதை சரியாக கடைபிடிக்க தெரிந்தவர்களே வெற்றியாளர்களாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தேவையில்லாத சின்னசின்ன செயல்களை ஏற்றுக்கொண்டு செய்ய துவங்கினால் உங்களது செயலை செய்ய நேரம் இருக்காது. உங்களது வேலை அழுத்தத்தை கூட்டிக்கொண்டே போகக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு முடியாது என்று சொல்ல பழகுங்கள்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது. எந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கு முன்னுரிமை கொடுப்பது. எல்லா செயல்களையும் சிறப்பாக செய்யவேண்டும் என்பது அவசியம் இல்லை, முடிக்க வேண்டிய வேலையை முடிப்பதுதான் சிறந்தது. எல்லாவற்றிற்க்கும் கால அவகாசம் முக்கியம் அதற்குள்ளாக செய்து முடிப்பது சிறந்தது.
நீங்கள் செய்யும் செய்களுக்கு இடையே செயலை செய்வதற்க்கு குறிக்கீடாக வரும் எண்ணங்களை தவிர்பபதற்கு கற்றுக்கொள்ளுங்கள். செயலை முடிப்பது என்பது ஒரு சிறந்த பழக்கம் என்பதை நினைவில் கொண்டு தீர்க்கமாக செயல்படுங்கள். அப்போது தான் உங்களால் செயலை முடிப்பவராக இருக்க முடியும். இவ்வுலகில் எல்லா நேரங்களிலும் எல்லோருடனும் இருக்க முடியாது, எல்லா விசயங்களிலும் எல்லோரையும் சந்தோசப்படுத்த முடியாது. அதனால் தேவையான சமயங்களில் முடியாது என்ற வார்த்தையை சொல்ல பழகுங்கள்.
வெற்றி நிச்சயம்
No comments:
Post a Comment