Friday, January 21, 2022

யாரையெல்லாம் சனி பகவான் பிடிப்பார்.

 யாரையெல்லாம் சனி பகவான் பிடிப்பார்.




               முதலில் சனிபகவானுடைய காரகத்துவங்களை பார்க்கலாம் சனி பகவான் அடிமை மனோபாவம்,தாழ்வு மனப்பான்மை, பயத்தை கொடுக்கக் கூடியவர்பாதுகாப்பற்ற ஒரு மனோபாவத்தை கொடுக்கக் கூடியவர்.தற்கொலை எண்ணத்தை கொடுக்கக் கூடியவர், அசிங்கத்தையும் ,அவமானத்தையும்,  கொடுக்கக் கூடியவர்,இது எல்லாம் சனியின் காரகத்துவம் ஆகும். அதாவது யாரெல்லாம் அகங்காரத்தில் ஆணவத்தில் ஆடுகிறார்களோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களோ, கடமை, நேர்மை, கண்ணியத்துடன் வாழாமல் இருக்கிறார்களோ, அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கிறார்களோ அவர்களைத் தான் சனிபகவான் பிடிப்பார்.

                    இதுபோன்று செய்பவர்களை சனி பகவான் முதலில் அவர்களுடைய  தொழிலில் கை வைப்பார் அதாவது தொழிலில் மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துவார்.அல்லது அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்.இல்லையென்றால் ஆயுளில் கை வைத்து விடுவார். இதை நாம் நிகழ்காலத்தில் எப்படி ஒப்பிடலாம் என்றால் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் அல்லது ஊரில் இருக்கும் மிகப்பெரிய முக்கியமான மனிதர்கள் தங்களுக்கு ஒரு அசிங்கம் ஒரு அவமானம் வந்து விட்டால்.அது தொழிலாக இருக்கலாம் சொந்த பிரச்சினையாக இருக்கலாம் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம்.உடனே தற்கொலை செய்து கொள்வார்கள்.

                   இதற்குக் காரணம் சனி பகவான் தான் ஆவார்.ஏனென்றால் இவர்கள் இத்தனை காலம் வைராக்கியத்துடன் கொண்டிருந்த அந்த ஒரு கொள்கை மற்றும் ஒரு பெயர் ,புகழ், அந்தஸ்து, மரியாதை, இது எல்லாம் இவர்களை விட்டுப் போய் விட்டால்,அவர்களால் அந்த மன வலியை தாங்கி வாழ முடியாது அதனால்தான் இவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். யாரையெல்லாம் சனி பிடிப்பார் என்றால் அல்லது பிடித்திருப்பார் என்றால் அகங்காரம் ஆணவத்தின் உச்சத்தில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களைத்தான் சனி பிடிப்பார் அவர்களை தான் சனிபகவான் பழி வாங்குவார்.

                  எனவே ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு போதும் அகங்காரத்தில் ஆணவதில் தலை கணதில் இருக்கக்கூடாது,வாழக் கூடாது அப்படி இருந்தால் சனி பகவான் முதலில் அவர்களைத்தான் பிடிப்பார் பிறகு தன்னுடைய வேலையை காட்டி விடுவார். சனி பகவான் ஒருவரை பிடித்தவர் என்றால் அவர்களை இரண்டு விஷயங்களில் துன்புறுத்துவது தொழிலில் மற்றொன்று ஆயுளில். அதிலும் மிக முக்கியமாக சனியின் காரகத்துவமான கடை நிலை ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பவர்கள், அடிமை வேலை செய்பவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள் கொத்தடிமைகள், தாழ்த்தப்பட்ட  மக்கள்,பழங்குடிமக்கள்,சிறுபான்மையின மக்கள்,உடல் ஊனமுற்றவர்கள் அங்கஹீனம் கொண்டவர்கள், பிச்சைக்காரர்கள். இவர்கள் மனம் புண்படும் வகையில் ஒரு தவறையோ ஒரு கேலி கிண்டலயோ,  ஒரு துரோகத்தையும் என்றைக்குமே செய்யவே கூடாது.

                  மீறி செய்தார்கள் என்றால் சனி பகவான் அவ்வளவுதான் அவர்களை விட்டு வைக்க மாட்டார் உடனடியாக பிடித்துவிடுவார் பிறகு அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் தொழிலிலும் ஆயுளிலும் கண்டிப்பாக கை வைத்து விடுவார்.எனவே யாரும் இவர்களை சார்ந்து எந்த ஒரு தவறையும் ஒரு துரோகத்தையும் ஒரு கேலி கிண்டளையும் செய்யாதீர்கள்.  முக்கியமாக சனி பகவானுக்கு அகங்காரம் ஆணவம் என்பது பிடிக்காது.நம்மை சனி பகவான் பிடிக்கக் கூடாது அல்லது சனியின் தாக்கத்திலிருந்து நாம் பாதிக்கக்கூடாது என்று நினைக்க வேண்டும் என்றால்.முதலில் நாம் அகங்காரத்தில் ஆடுவது ஆணவத்தில் ஆடுவதை விட்டுவிட வேண்டும் அப்போதுதான் சனி பகவான் நம்மை விடுவார். யாரெல்லாம் தன்னடக்கத்துடன் நாவடகத்துடன் சொல்லடக்கத்துடன் பொறுமையுடன் நிதானத்துடன் அமைதியுடன் மரியாதையுடன் இருக்கிறார்களோ அல்லது வாழ்கிறார்களோ அவர்களை சனி பகவான் காலத்திற்கும் அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் அவர்கள் கேட்கும் அனைத்தையும் வாரி வாரி வழங்குவார்.இவர்கள்தான் சனிபகவானுடைய அருள் பெற்றவர்கள்.


No comments:

Post a Comment