Tuesday, January 11, 2022

நல்ல சிந்தனைகள் கொடாத செல்வம்

 நல்ல சிந்தனைகள்  கொடாத செல்வம்

துளசிதாசருடைய மடத்தில், ஏராளமான செல்வம் குவிந்து கிடந்தது. நிறைய சாதுக்கள் வந்து நன்றாக சாப்பிடுவர்; தேவையான பணம், பொருள் பெற்று செல்வர். ஒரு சமயம் நான்கு திருடர்கள், சாதுக்கள் போல வேஷமிட்டு மடத்துக்குள் வந்து தங்கி விட்டனர். இரவு நேரம் வந்ததும் மடத்திலிருந்த சில பொருட்களை திருடி, கொல்லை வழியாக வெளியேற முயன்றனர்; ஆனால், அங்கிருந்த இரண்டு காவலர்கள் திருடர்களை அடித்து, உதைத்து மடத்திலிருந்தவர்களின் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

 விஷயம் அறிந்த துளசிதாசர், திருடர்களைப் பார்த்து, "இந்த பொருளுக்காக இப்படி இரவில் வந்து ஏன் கஷ்டப்பட்டீர்; பகலிலேயே வந்து என்னை கேட்டிருந்தால், நானே கொடுத்திருப்பேனே; இதை நீங்களே எடுத்து செல்லுங்கள்..." என்றார்; திருடர்கள் மனம் மாறினர்.

"ஐயா... எங்களுக்கு புத்தி வந்தது. காவல்காரர் அடித்த அடியை மறக்க மாட்டோம்..." என்றனர்.

 இதை கேட்ட துளசிதாசர், "என்னது... காவல்காரர்கள் உங்களை அடித்து விட்டனரா? அவர்களை காட்டுங்கள், நான் தண்டிக்கிறேன்..." என்றார். திருடர்கள், காவல்காரர்களை தேடிச் சென்றனர்; ஆனால், அவர்களை காணவில்லை. துளசிதாசருக்கு கோபம் தணியவில்லை. ...

 அப்போது ராமர், லஷ்மணர் இருவரும், தாசர் முன் தோன்றி, "நாங்கள் தான் திருடர்களை அடித்தது; காவலுக்கு இருந்ததும் நாங்கள் தான். எங்களை தண்டியுங்க..." என்றனர். தாசர் மனமுருகி, "தங்களை, என் பொருளை காக்கும்படி செய்து விட்டேன். அபசாரம்; என்னை மன்னியுங்கள்..." என்று கூறி, விழுந்து வணங்கினார்.

 

அவரை பார்த்து, ராமர், லஷ்மணர், "தாசரே... பொருளை சேர்த்து வைக்காதீர். அன்னதானம் மிகச்சிறந்த தானம். ஆகவே, உம் பொருளை அன்னதானம் செய்து செலவிடுங்க..." என்று கூறி, அருள் செய்து மறைந்தனர். பிறகு, அவர் அப்படியே செய்தார். இந்த புராண கதை கூறும் அறநெறி அடுத்தவருக்கு உதவுதல்....

இதை வலியுறுத்தும் பழந்தமிழ் பாடல்..

 இன்றய வெண்பா*: * நாலடியார்*: *பாடல்*:

_வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;_

_இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் -_ _உழந்ததனைக்_

_காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங்_ _கைந்நோவ_

_யாப்புய்ந்தார் உய்ந்த பல.

 விளக்கம்*:

செல்வர் யார், வறியவர் யார் என வகைபடுத்தும் நாலடியார் இந்த பாடலின் கருத்து இது..

 ஒருவருக்கு ஒன்றைக் கொடாத செல்வரைவிட வறுமையாளரே பல துன்பங்களிலிருந்து தப்பியவர் ஆவர். எவ்வாறெனில், 'செல்வத்தையெல்லாம் இழந்தார்' என உலகோர் பழிக்கும் பழிச் சொல்லினின்றும் தப்பினர்; வருந்திச் செல்வத்தைக் காத்தலின்றும் தப்பினர்

 அச்செல்வத்தைப் பிறர் அறியாதவாறு புதைப்பதற்காக நிலத்தைத் தோண்டும் துன்பத்தினின்றும் தப்பினர். இப்படி அவ்வறியவர் தப்பினவை பல உண்டு:

 

வான் புகழ் வள்ளுவத்தின் கருத்தில்*:

 _"ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்_

_ஏனை இரண்டும் ஒருங்கு."_

விளக்கம்*:

நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.

 இணையத்தில் படித்தது...

No comments:

Post a Comment