சகல சாப்பாட்டு பிரியர்களுக்கு சமர்ப்பணம் .
*பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு பருப்பு சாதமே சொர்க்கம்*
*மார்கழி மாத குளிரில் மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம்*
*கார மிளகு தாளித்த பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்.*
*பூரிக்கு, உருளை கிழங்கு மசலா, தோசைக்கு வெங்காய சட்னி, இட்லிக்கு மிளகாய் பொடி + நல்ல எண்ணெய், பிரியாணிக்கு தயிர் பச்சடி, வெண் பொங்கலுக்கு கத்தரிக்காய் கொத்சு, வாழைக்காய் பஜ்ஜிக்கு தேங்காய் சட்னி, சப்பாத்திக்கு குருமா சொர்கம்.*
*பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ் பருப்பு உசிலி சொர்க்கம்*
*கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம்*
*குடைமிளகாய் சாம்பாருக்கு கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்*
*உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும்*
*உருளைக் காரகறியே சொர்க்கம்*
*வெந்தய குழம்பிற்கு வெண்டைக்காய் கறி சொர்க்கம்*
*சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு சுட்ட அப்பளமே சொர்க்கம்*
*பத்திய மிளகு குழம்பிற்கு பருப்பு தொகையலே சொர்க்கம்*
*மத்தியான தயிர் சாதத்திற்கு மாவடு இருந்தால் சொர்க்கம்*
*அடைக்கு வெல்லத்தோடு அவியல் இருந்தா சொர்க்கம்;*
*மீந்து போன அடைமாவில்**Brilliant குணுக்கு சொர்க்கம்*
*ஒருவாரமான தோசைமாவில் ஊத்தப்பமே சொர்க்கம்*
*பசியில் துடிப்பவனுக்கு பழைய சோறே சொர்க்கம்*
*நோயில் வீழ்ந்தவனுக்குநொய்க் கஞ்சியே சொர்க்கம்.*
No comments:
Post a Comment