Tuesday, January 11, 2022

வாழ்க்கை அழகாக செல்ல ஆறு கட்டளைகள்

 வாழ்க்கை அழகாக செல்ல ஆறு கட்டளைகள்

வாழ்க்கையை அழகா கொண்டு செல்ல ஆறு கட்டளைகள் எடுத்துக்கோங்க.. வாழ்வு ரொம்ப மகிழ்ச்சியா மாறிடும்.

1.எதற்கெடுத்தாலும் எல்லாத்துக்கும் கவலை படாதீங்க. காலையில அழுதா ஈவினிங் சிரிப்போம். துக்கமோ மகிழ்வோ எதுவோ அதிக நேரம் நம்ம உடல்நிலை எடுத்துக்காது. எல்லாம் கொஞ்ச நேரம். மீறி போனா அதை நீங்களே பிடிச்சு தொங்கறீங்கன்னு அர்த்தம்.

2.யதார்த்தம் பழகுங்க..அதான் முக்கியம். யார்வேணா கீழிருந்து மேலையும் மேலிருந்து கீழேயும் ஒரு நாளிலியே மாறிடுவாங்க. எனக்கா இந்த நிலைமை ன்னு வாயடைச்சு போகாதீங்க. உங்களை விட அவமான பட்டவங்க எல்லாம் உலகத்துல இருக்காங்க.

3.எதையும் ஆழமாக நேசிக்காதீங்க. எதையும் ஆழமாக யோசிக்காதீங்க. ரொம்ப சிம்பிள் இது.நேசித்தலும் அதற்கான யோசித்தலும் தான் அழுகைக்கு அடிப்படை காரணம் என்ற தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க.

4.ஒருத்தவங்க போயிட்டாங்கன்னா கெஞ்சாதீங்க.வேணும் வரை இருந்துட்டு திடீர்னு போறாங்கன்னா கஷ்டபட வேண்டியது அவங்க தான். ‌நீங்க இல்ல. உதாசீன படுத்தினா உதறி விடுங்க. விலகி செல்பவர்களிடம் தானா போயிட்டு அன்பை கொட்டாதீங்க.. அதனால் வர அற்ப கவலைகளுக்கு இடம் தராதீங்க.. அந்த நினைவுகள் மேலே எழும்பிச்சுன்னா ஒரே போடு போட்டு புதைச்சிடுங்க..

5.துரோகம் பழகுங்க..பிறப்பு இறப்பு போல துரோகமும் மனித வாழ்வில் ஓர் அங்கம். ஏமாற்றத்தை ஏற்றுக்கங்க. அப்பதான் அடுத்த முறை ஏமாற மாட்டீங்க. இழப்புகளை இயல்பாக்குங்க.அப்போதுதான் இழப்புகளை பற்றி கவலைபட மாட்டீங்க.அவ்வளவு எளிதில் எவரையும் நம்பிடாதீங்க. வாழ்க்கையில் இதான் முக்கியம்.

6.ஆறுதலா இருக்க உங்களை தயார்படுத்திக்கங்க. வேற யாரும் பண்ணுவாங்கன்னு நிக்காதீங்க. உங்களுக்கு நீங்க தான் வேலைக்காரன் எஜமான் எல்லாமே..


No comments:

Post a Comment