Friday, January 21, 2022

நம் வாழ்வில் சனிபகவானுடைய பங்கு.

  நம் வாழ்வில் சனிபகவானுடைய பங்கு.


                     நவகிரகங்களில் சனி பகவானுக்கு தான் ஒரு மனிதனுக்கு தேவையான மிக முக்கியமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொழில் ,ஆயுள், கடமை கர்மகாரகன்,கண்ணியம், இது அனைத்தும் சனி பகவானின் காரகத்துவம் ஆகும். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமானவைகள் இதுதான். அதனால்தான் இது அனைத்தும் சனியின் கட்டுப்பாட்டில் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக சனியன் காரத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களும் நாம் வாழ்க்கையில் செய்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் கண்டிப்பாக இருக்கும்.  தொழில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் செய்தே ஆக வேண்டும் அது யாராக இருந்தாலும் சரி.   ஏன் இது அனைத்தும் சனியின் காரகத்துவதிற்கு கொடுத்தார்கள் என்றால் ஒரு மனிதன் தொழில் சார்ந்த விஷயங்களில் அகங்காரத்திலும் ஆணவதிலும் ஆடக் கூடாது என்பதற்காகத்தான்.

           தொழிலில் வருமானம் அதிகமாக வரும் போது தலைக்கனம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சனியின் காரகத்துவத்திற்கு தொழில் ஸ்தானத்தை கொடுத்திருக்கிறார்கள்.  அதனால்தான் காலபுருஷ தத்துவத்தின் அடிபடையில் தொழில் ஸ்தானத்தை குறிக்கக்கூடிய பத்தாம் பாவம் ஆகிய மகரம் என்னும் வீடும் லாப ஸ்தானத்தை குறிக்கக்கூடிய பதினோராம் பாவம் ஆகிய கும்பம் எனும் வீடும் சனி பகவானின் வீடுகளாக வருகிறது.  யாரெல்லாம் தொழிலில் ஏமாற்றுகிறார்களோ தொழில் அடுத்தவர்களுக்கு துரோகம் செய்கிறார்களோ தொழிலில் தர்மத்தையும் நியாயத்தையும் சரியாக கடைப்பிடிக்காமல் இருக்கிறார்களோ அவர்களை தண்டிப்பதற்காக தான் சனி பகவானுக்கு தொழில் ஸ்தானம் எனும் பத்தாம் பாவமும்,லாப ஸ்தானம் எனும் பதினோராம் பாவமும் கர்ம ஸ்தானம் சனி பகவானுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. சனிபகவான் தான் தொழிலுக்கும் அதிபதி ஆயுளுக்கும் அதிபதி. அதாவது  யாருடைய குடும்பத்தில் எல்லாம் தொழிலில் நன்றாக கொடிகட்டிப் பறக்கிறார்களோ அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் ஆயுள் அவ்வளவாக இருக்காது. அதே சமயம் யாருடைய குடும்பத்தில் எல்லாம் அனைவருக்கும் ஆயுள் நன்றாக இருக்கிறதோ அவர்கள் குடும்பத்தில் தொழில் நன்றாக இருக்காது.இது தான் சனிபகவான் சொல்லும் ரகசியம் ஆகும்.

 



No comments:

Post a Comment