செத்தும் கெடுத்தான் சீரங்கன்
பழமொழிக்கான விளக்க கதை
சீரங்கன் என்ற ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்தான். அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் அந்த கிராமத்தை சேர்ந்தவருக்கு தீமை செய்வதைத் தவிர வேறு வேலையே இல்லை.
நான் இறந்தபின்பு
நீங்கள் அனைவரும் எனது உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்க வேண்டும். பின் அனைவரும் சேர்ந்து தரையில் இழுத்துச் சென்று பின்பு சிதையில் தீமூட்ட வேண்டும். அப்போதுதான்
எனது ஆத்மா சாந்தியடையும். இது எனது கடைசி ஆசை” என்று கூறினானாம்.
அவன் சில நாட்களில் இறந்து போனான். ஊரார் அவனது விருப்பப்படியே உடலை கூரிய ஆயுதங்களால் தாக்கி கயிறால் பிணைத்து இழுத்துச் சென்று சுடுகாட்டை அடைந்தனர். அப்போது போலீஸ்காரர்கள் வந்து அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர்.
செத்தும் கொடுத்த சீதக்காதி. அதாவது வள்ளல் சீதக்காதியை “செத்தும் கொடுத்த சீதக்காதி” என்று கூறுவார்கள். இதுவே பொருள் மாறி செத்தும் கெடுத்த சீரங்கன் என்று ஆகிவிட்டதாக சிலர் கூறுவதுண்டு. புலவர் ஒருவர் யாசகம் கேட்டு சீதக்காதியை அடைய அப்போது சீதக்காதி இறந்து சிதையில் இருந்தாராம். புலவரோ சிதைக்கு முன் சென்று பாடினார். பிணமாகக் கிடந்த சீதக்காதி தனது கைகளை நீட்டி மோதிரம் தந்ததாக செவி வழி செய்தி உண்டு. இதுதான் செத்தும் கொடுத்த சீதக்காதி உருவாகக் காரணமாக அமைந்த நிகழ்ச்சியாகும்.
No comments:
Post a Comment