Saturday, January 1, 2022

கலைஞருக்கும் படிப்புக்கும் உள்ள சம்மந்தம்

 கலைஞருக்கும் படிப்புக்கும் உள்ள சம்மந்தம்


படித்ததிலிருந்து பிடித்த ஒரு பதிவு

நான் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன், நன்றாக இருக்கிறேன். இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம்? இதற்கும் கலைஞருக்கும் என்ன சம்மந்தம்?

 எங்கள் ஊர் தம்பிகள் சிலரின் கேள்வி இதுஅவர்களுக்கான பதில்.

 உங்கள் வீட்டில், சித்தப்பா, பெரியப்பா வீடுகளில் 1967களுக்கு முன்பு எத்தனை பேர் எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்துப்பாருங்கள், அப்படி தேர்ச்சியடைந்திருந்தால், எத்தனை பேர் பதினோறாம் வகுப்பு(அன்றைய SSLC) தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கவும். அதையும் மீறி எத்தனை பேர் PUC தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தேடிப் பார்க்கவும். எனது அப்பா SSLCயில் மூன்றாவது முறைதான் தேர்ச்சியடைய முடிந்தது. எனது சித்தப்பா PUCயில் தோல்வியடைந்த பிறகு அவரால் அடுத்து படிக்க முடியவில்லை

 ஒரு ஊரில் நூறு பேர் SSLC தேர்வு எழுதினால் 97 தோல்வியடைவார்கள் என்கிற நிலையை மாற்றி 97 பேர் வெற்றியடைவார்கள் என்கிற நிலையை உருவாக்கியவர் கலைஞர்.

 உங்கள் அப்பாவோ, எனது அப்பாவோ நம்மை விட முட்டாள்கள் கிடையாது. நம்மை விட குறைவாக உழைப்பைச் செலுத்தியவர்கள் அல்ல.   அவர்களால் பள்ளிக் கல்வியைத் தாண்ட முடியாதபோது நம்மால் தாண்டமுடிந்ததற்கு காரணம் கிராமப்புற மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்று நினைத்த கலைஞரின் சிந்தனையில் உருவான அரசாணைகள்.

 கலைஞரையே தேர்வுகளில் தோற்கடித்த தேர்வு முறையை நமக்காக நாம் வெற்றியடைவது போல மாற்றியவர் கலைஞர் 

பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லக்கூடாது என்றிருந்த கல்வி முறையை பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்ல வேண்டும் என்று மாற்றியவர் கலைஞர்.

 இன்று இந்திய அளவில் உயர்கல்விக்கு செல்வோர் சதவிகிதம் 26% ஆக இருக்கும்போது அதை தமிழ்நாட்டில் 49% என்கிற நிலைமை உருவாக 

அடிப்படைக் கட்டமைப்புகளையும் அரசாங்க விதிமுறைகளையும் மாற்றியவர் கலைஞர்.

 ஒரு வேளை பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைவில்லையென்றால் அடுத்து டிப்ளமோ படித்திருக்க முடியாது, அதன் மூலம் ஓரளவிற்கு கௌரவமான வேலை வெளிநாடுகளில் கிடைத்திருக்காது, நமக்கு முந்தைய தலைமுறை போல வெயிலில் கம்பி கட்டுவது, பாலைவனத்தில் ஒட்டகம் மேய்ப்பது என்கிற நிலைமைதான் இருக்கும்

இன்றும் படிக்காகதவர்கள் 400 வெள்ளி அடிப்படை சம்பளம் பெறுவதற்கும், டிப்பளமோ படித்து 2000 வெள்ளி சம்பளம் பெறுவதற்குமான காரணம் நாம் திறமையாகப் படித்தோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்நமக்கு வாய்ப்பை உருவாக்கினார்கள், அவர்களுக்கு வாய்ப்பை மறுத்தார்கள். அதுதான் வித்தியாசம்.

 நாம் எதுவும் கேட்காமல் தானாக கிடைத்தால் அதன் அருமை புரிவதில்லை. புத்தியுள்ளவன் இப்பொழுதே விழித்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment